செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (08:26 IST)

சர்கார் செங்கல்பட்டு விநியோக உரிமை இத்தனை கோடியா?

தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வருகிறது தளபதி விஜய்யின் சர்கார்.  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில்  விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகி பாபு, ராதாரவி, பழ.கருப்பையா  என பல நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் டாப் வசூல் நாயகர்களில் முக்கியமானவர் விஜய் என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில்  சர்கார் படத்தின் விநியோக உரிமை தமிழகம் மட்டுமல்ல கேரளா ஆந்திரா என சூடுபிடித்திருக்கிறது. தற்போதய தகவலின் அடிப்படையில் பெரிய இடமான செங்கல்பட்டு விநியோக உரிமையை கே.கலையப்பன் 18 கோடி ரூபாய் கொடுத்து படத்தை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.