1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 நவம்பர் 2018 (11:09 IST)

பாகுபலி சாதனையை முறியடித்தது சர்கார்!

நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படம் முதல் நாளிலேயே பல்வேறு பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடித்து உச்சத்தில் கொடிகட்டி பறந்துகொண்டிருக்கிறது. மேலும்  சர்வதேச அளவில் முதல் நாளில் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்ற சாதனையை சர்கார் தக்கவைத்துள்ளது. . 
விஜய், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், வரலக்ஷ்மி  என நட்சத்திர பிரபலங்கள் ஒன்றுகூடிய    சர்கார் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.  முதல் நாளிலேயே எதிர்பார்த்ததை விட அதிகமான அளவு வரவேற்பு இருந்தது.
 
சென்னையில் மட்டும், ரூ.2.37 கோடி கலெக்ஷன் பெற்று சாதனை படைத்துள்ளது சர்கார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் ரூ.1.76 கோடி சாதனையை சர்கார் முறியடித்துள்ளது. 
 
தமிழகம் மற்றும் கேரளாவில் பாகுபலி படத்தின் வசூல் சாதனைகளை சர்கார் வீழ்த்தியுள்ளது. சர்வதேச அளவில், சர்கார் ரூ.75 கோடி வசூலித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் ரூ.2.47 கோடி, ஆஸ்திரேலியாவில் ரூ.1.16 கோடி, பிரிட்டனில் ரூ.1.17 கோடி என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது சர்கார்.