அட சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது? ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம்!
சரவணன் மீனாட்சி மற்றும் ஆபிஸ் ஆகிய தொடர்களின் மூலம் பிரபலமானவர் ரக்ஷிதா.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஃபீஸ் தொடரில் நடித்து பிரபலமானவர் ரக்ஷிதா. அந்த தொடரில் அவரின் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த அவருக்கு சரவணன் மீனாட்சி தொடரில் நாயகியாக வாய்ப்புக் கிடைத்தது. அதன் இரண்டு சீசன்களில் அவர் கதாநாயகியாக நடித்தார். அதன் பின்னர் பெரிதாக சின்னத்திரையில் அவருக்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இப்போது அவர் சமூகவலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். வழக்கமாக ஹோம்லி லுக்கில் இருக்கும் அவரா இப்படி கவர்ச்சியான உடையோடு புகைப்படம் வெளியிட்டுள்ளார் என்று ரசிகர்கள் ஆச்சர்யமாகியுள்ளனர்.