வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (09:21 IST)

நீ ஒரு காமெடி பீசு: சேரனை கலாய்த்த சரவணன்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே சேரனுக்கும் சரவணனுக்கும் கருத்துவேறு இருந்து வந்தது. ஒருவரை ஒருவர் நாமினேஷன் செய்து வருவதும் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்தது. இருப்பினும் மீரா விஷயத்தில் சேரனுக்கு சரவணன் ஆதரவு கொடுத்தாலும், அவர் மீராவுக்கு மறைமுகமாக உதவி செய்ததாகவே சேரன் கருதினார்
 
இருவருக்கும் இடையிலான மறைமுகமாக பகை இன்று வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வார டாஸ்க் குறித்து கலந்துரையாடியபோது விஜயகாந்த் போல் எந்த இடத்திலும் சரவணன் நடிக்கவில்லை என்றும் டான்ஸ் ஆடும்போது மட்டுமே அவர் விஜயகாந்த் போல் ஆடியதாகவும் சேரன் கூற, அதனால் சரவணனுக்கு கோபம் ஏற்பட்டது. சேரனின் ரஜினி கெட்டப்பை குறிப்பிட்டு பேசிய சரவணன், 'ரஜினி கெட்டப்பில் நீங்க காமெடியாக இருந்தீர்கள்' என்று குத்தி காட்டினார். அதுமட்டுமின்று சேரனை 'வாய்யா போய்யா' என்று சரவணன் பேச, அதற்கு சேரன் எதிர்ப்பு தெரிவிக்க, 'அப்படித்தாண்டா பேசுவேன்' என்று கூட சொல்வேன் என்று சரவணன் பேசியதும் மற்ற ஹவுஸ்மேட்ஸ் அதிர்ச்சி அடைந்தனர். 
 
இன்றைய சேரன், சரவணன் ஆகியோர்களின் சண்டை வரும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் கமல் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கும் என்பதும் அதுமட்டுமின்றி இருவருக்கும் இடையே அடுத்த வாரமும் காரசாரமான மோதலும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது