பிக்பாஸில் இருந்து வெளியேறும் கவின்? "அப்படியே போயிடு திரும்ப வந்திடாத" !

Last Modified வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (16:10 IST)
காவிய காதல் பிரச்சனையில் இருந்து மீள முடியாமல் திணறிவந்த கவின் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக முடிவெடுத்துள்ளார். 


 
இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்தது. அதில் தற்போது மீண்டும் சாக்ஷி கவினிடம் சென்று எல்லா பிரச்சனைகளுக்கும் நான் தான் காரணமா சென்று கேட்டு முதலில் இருந்து ஆரம்பிக்கிறார். 
 
பின்னர் கவின் , தயவுசெய்து என்னை விட்டுடு மச்சான் என்று கூறி அனைவர் முன்னிலையில் நின்று, இந்த வீட்டில் என்னை இரண்டு வெவ்வேறு மாதிரி பார்க்க ஆரம்பித்து விட்டனர். நான் இன்னும் இங்கு இருந்தால் பிரச்சனை தான்.  அதனால் இந்த வாரம் என்னை நாமினேட் செய்து வெளியேற்றிவிடுங்கள் ஒருவேளை இந்த வாரம் நான் சேவ் ஆகிவிட்டால் அடுத்தவாரம் எல்லோரும் என்னை நாமினேட் செய்து வெளியேற்றிடுங்கள் என்று கூறுகிறார். 
 
இந்த ப்ரோமோவில் கவின் இப்படி பேசியதை கண்ட நெட்டிசன்ஸ், "அப்பாடா கடைசியா ஒரு முடிவுக்கு வந்தியே அப்படியே போயிடு திரும்ப வந்திடாத" என்று கூறி கலாய்த்து வருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :