திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 12 மே 2021 (18:17 IST)

‘இறைவா’ உனக்கு இரக்கமில்லையா? நடிகர் சரத்குமார் உருக்கமான அறிக்கை!

கொரோனா பாதிப்பு குறித்து நடிகர் சரத்குமார் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
 
இயற்கை சீற்றத்தின்‌ ஓர்‌ அங்கமாக மனித உயிர்களை மாய்க்கும்‌ கொரோனாவை ஏன்‌ தந்தாய்‌?
 
நம்மை சுற்றி மரண ஓலங்கள்‌ தினம் தினம்  அஞ்சி வாழும்‌ மனித வாழ்க்கை
 
உற்றார்‌ உறவினர்‌, சொந்த பந்தங்கள்‌, நம்‌ மக்கள்‌ மாய்ந்து வருகிறார்கள்‌.
 
அலைபேசி ஒலித்தால்‌ ஓர்‌ அச்சம்‌, “அண்ணா பிராண வாயு கிடைக்குமா?
 
பிராண வசதியுள்ள படுக்கை கிடைக்குமா? மருத்துவமனையில்‌ இடம்‌ கிடைக்குமா? என்று கேட்கும்‌ போதெல்லாம்‌ நெஞ்சம் வெடித்து‌ சிதறுகிறது.
 
நோய்‌ தொற்றை கட்டுப்படுத்த ஆட்சியாளர்களின்‌ கடுமையான முயற்சி, மருத்துவர்கள்‌, செவிலியர்கள்‌, மருத்துவமனை நிர்வாகிகள், காவல்துறையினர்‌, அரசு ஊழியர்கள்‌, பத்திரிகை, ஊடக சகோதரர்களின்‌ ஒய்வில்லா உழைப்பு, இதற்கெல்லாம்‌ பலன்‌ கிடைக்குமா ?
 
தொற்றை கட்டுப்படுத்த முடியுமா?
 
தற்போது நம்மிடம்‌ இருக்கும்‌ ஒரே ஆயுதம்‌, நம்மை நாம்‌ பாதுகாத்து கொள்வது மட்டும்‌ தான்..பொருளாதார பின்னடைவுகள், உழைத்தால்‌ தான்‌ உணவு என்று வாடுகின்ற மக்கள்‌ ஒருபுறம்‌ இருந்தாலும் நம்மை இந்த கொடிய நோயிலிருந்து பாதுகாத்து கொள்வது முதல்‌ கடமை.
 
உடலும்‌, உயிரும்‌ இருந்தால்தான்‌ நம்மை மட்டும்‌ அல்லாமல்‌ நம்மை நம்பியிருக்கும்‌ உறவுகள்‌, நண்பர்கள்‌, மக்கள்‌ இவர்களையெல்லாம்‌ பாதுகாக்க முடியும்‌
 
உடல்‌ ஆரோக்கியமும்‌, உயிருமே நாம்‌ தற்போது பாதுகாக்க வேண்டியது என்பதை மனதில்‌ கொண்டு இதுவும்‌ கடந்து போகும்‌ என்ற நம்பிக்கையுடன்‌, தேவைப்பட்டால்‌ அவசியம்‌ இருந்தால்‌ மட்டுமே வெளியில்‌ செல்ல வேண்டும்‌ என அனைவரையும்‌ அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.
 
அரசு நிச்சயமாக உங்கள்‌ துன்பங்களை அறிவார்கள்‌,
 
நல்லது நடக்கும்‌ இறைவா, போதும்‌ உன்‌ சீற்றம்‌ எங்களை வாழ விடு
 
இவ்வாறு நடிகர் சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.