குமரியாக மாறிய குழந்தை நட்சத்திரம்: ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இணைந்ததாக தகவல்
சியான் விக்ரம் நடித்த 'தெய்வத்திருமகள்' என்ற திரைப்படத்தில் அவருடைய மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் சாராவை யாரும் மறந்திருக்க முடியாது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் விக்ரமையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு அவருடைய நடிப்பு இருந்ததாக விமர்சனம் செய்யப்பட்டது
இந்த நிலையில் தெய்வத்திருமகள் படத்தை அடுத்து சைவம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா தற்போது குமரி ஆக மாறிவிட்டார். இளம் கதாநாயகி வேடத்திற்காக அவர் படங்களை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் ஒரு சில இயக்குனர்களிடம் கதை கேட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஆனால் இந்த தகவலை இன்னும் படக்குழுவினர் உறுதி செய்யவில்லை என்றாலும் விரைவில் இந்த தகவலை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது