சந்தானம் ஒரு ஹிந்தி படத்தில் நடித்திருக்கிறாரா? மிகவும் அரிதான புகைப்படம்!
தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களில் ஒருவரான சந்தானம் ஒரே ஒரு இந்தி படத்தில் நடித்துள்ளார் என்பது யாரும் அறியாத தகவல்.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் பட்டியலில் சந்தானத்துக்கு என்றும் நீங்காத இடம் உண்டு. ஆனால் திடீரென அவருக்கு எழுந்த கதாநாயகன் ஆசையால் இப்போது காமெடியனாக அவர் நடிப்பதில்லை. ஆனாலும் ஆண்டுக்கு 4 காமெடி படங்களாக அவர் நடிப்பில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் சந்தானம் காமெடியனாக நடித்துக் கொண்டிருந்த போது ஒரே ஒரு ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் பெயர் சின்னு மன்னு என்ற பெயர் சூட்டப்பட்டது. அதில் சந்தானம் அபூர்வ சகோதரர்கள் கமல் கெட் அப்பில் நடித்தார். அது சம்மந்தமான புகைப்படம் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.