ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (14:03 IST)

மலையாளம், தெலுங்கை அடுத்து கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை: திடுக் புகார்..!

கோப்புப்படம்
மலையாள சினிமாவில் பாலியல் தொல்லைகள் உள்ளன என்பது ஹேமா கமிஷன் அறிக்கையால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறைகளில் ஒருசில நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லைகள் நிலவுவதாக நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி கன்னட மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கன்னட திரைப்பட துறையில் பெண் கலைஞர்களுக்கு தனித்துவமான பாதுகாப்பு அமைப்புகள் இல்லை என்பதையும், தனது அறக்கட்டளையின் மூலம் ஒரு சுதந்திரமான அமைப்பை உருவாக்குவோம் என்றும் சஞ்சனா கூறியுள்ளார். 
 
மேலும், திரைத்துறையில் புதிய முகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, "சான்டல்வுட் வுமன் ஆர்டிஸ்ட் அசோசியேசன்" என்ற அமைப்பை உருவாக்க முனைவதாகவும், கன்னட திரைத்துறையில் பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பை முன்னிட்டு நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார். 
 
Edited by Mahendran