1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : புதன், 27 டிசம்பர் 2017 (20:54 IST)

காரைக்குடியில் ‘சாமி ஸ்கொயர்’ டீம் என்ன பண்ணாங்க தெரியுமா?

காரைக்குடியில் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. ஹரி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சாமி ஸ்கொயர்’. ஏற்கெனவே வெளியான ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராகி வருகிறது. விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்தப் படத்தில், பாபி சிம்ஹா வில்லனாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
 
‘இருமுகன்’ படத்தைத் தயாரித்த ஷிபு தமீம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். காரைக்குடியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அரசியல் கூட்டம் நடப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுடன் இந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
 
இந்தக் கூட்டத்தில், பெருமாள் பிச்சையின் 29வது நினைவு தினம் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ‘சாமி’ படத்தில் பெருமாள் பிச்சையாக நடித்தவர் கோட்டா சீனிவாச ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.