1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 18 டிசம்பர் 2017 (12:29 IST)

முடிவுக்கு வந்தது ‘ஆர்.கே.நகர்’

வெங்கட்பிரபு தயாரித்துவரும் ‘ஆர்.கே.நகர்’ படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வந்துள்ளது.
சரவண ராஜன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘ஆர்.கே.நகர்’. வைபவ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், சனா அல்தாப் ஹீரோயினாக நடிக்கிறார். இனிகோ பிரபாகர் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். சம்பத் ராஜ், சந்தான பாரதி, சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
 
வெங்கட் பிரபுவின் ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. பிரேம்ஜி அமரன் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சனிக்கிழமையுடன் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.