1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (15:15 IST)

கர்ப்பம் தரித்த சமந்தா: பிரவத்திற்குள் இவ்வளவு சிக்கல் ஏற்படுமா?

சமந்தாவின் யசோதா பட டீசர் சற்று முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


பிரபல நடிகை சமந்தா முக்கிய வேடத்தில் நடித்து வரும் திரைப்படம் யசோதா. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் சமந்தாவின் புதிய திரைப்படம் இது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

முன்னதாக சமந்தாவிற்கு பாடகி சின்மயி டப்பிங் பேசி வந்த நிலையில் சமந்தா இந்த படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இன்னும் ஓரிரு நாள்களில் டப்பிங் பணியை அவர் முடித்து விடுவார் எனவும் கூறப்பட்டது. 

 
இந்த படம் முதலில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முதலில் திட்டமிடப்பட்ட நிலையில்  பணிகள் முடிவடையாததால் தற்போது செப்டம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இந்த படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார் சமந்தா. இந்த டீசரில் சமந்தா சில இன்னல்களை சந்திப்பதை போல அமைந்திருப்பதால் கதைக்களத்தின் மீது கவனம் பெற்றுள்ளது.

இதோ இந்த டீசர் உங்கள் பார்வைக்கு…