புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (19:15 IST)

சமந்தா விவாகரத்து குறித்து அவரது தந்தையின் பேஸ்புக் பதிவு!

samantha ruthprabhu
பிரபல நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து அவரது தந்தை தனது பேஸ்புக்கில் செய்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 
 
சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா ஆகிய இருவரும் கடந்த ஆண்டு பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இந்த நிலையில் திடீரென சமந்தாவின் தந்தை  தனது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 
 
என்னை பொருத்தவரை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் ஒன்றுதான் என்றும் அவர்கள் இருவரும் பிரிவதாக முடிவெடுத்தது தனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி என்றும் தெரிவித்தார் 
 
ஆனால் அதே நேரத்தில் சமந்தா எடுத்த முடிவில் தலையிட நான் விரும்பவில்லை என்றும் கூறினார். மேலும் தற்போது கூட நான் நாகசைதன்யா மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்து வருகிறேன் என்றும் இரு குடும்பங்களும் நட்புறவுடன் தான் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.