ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2020 (14:28 IST)

ரொம்ப சோகமா இருந்தேன்.. உங்க போட்டோ பார்த்ததும் மனசுக்கு இதமா இருக்கு சம்மு!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் நடிகை சமந்தாவும் வீட்டில் இருந்தபடியே காய்கறி , கீரை , முட்டைகோஸ் உள்ளிவற்றை தன் வீட்டு மொட்டைமாடியில் கார்டனிங் செய்து அறுவடை செய்து வந்தார். அத்துடன் புதியதாக பேஷன் டிசைனர் கம்பெனி ஒன்றையும் துவங்கியுள்ளார்.


இதற்க்கிடையில் அவ்வப்போது ஏதேனும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் சமந்தா தற்ப்போது இலைகளுக்கு நடுவில் தேவதை போல் போஸ் கொடுத்துள்ளார். அதற்கு ரசிகர் ஒருவர் " நான் ரொம்ப சோகமா இருந்தேன் செல்லம் உன் போட்டோவை பார்த்த பிறகு தான் மனசுக்கு நல்லா இருக்கு" என கமெண்ட் செய்துள்ளார். யம்மா சமந்தா... இதே மாதிரி ரசிகர்ளின் மனசை குஷி படுத்திட்டே இரும்மா உனக்கு புண்ணியமா போகும்..