பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொந்தரவு: நடிகர் சல்மான்கான் மீது வழக்கு!
பெண் பத்திரிகையாளருக்கு நடிகர் சல்மான்கான் பாலியல் தொந்தரவு அளித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு பெண் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் சல்மான்கான் மேல்முறையீட்டு செய்துள்ளதாகவும் இந்த மேல்முறையீட்டு மனு இன்னும் ஒரு சில நாட்களில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி விட்டன