திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2018 (17:14 IST)

தமிழில் நல்ல பட வாய்ப்புகாக காத்திருந்தேன் : கரு நாயகி

சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் ‘கரு’படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
 
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கரு’. பெண்ணை மையப்படுத்திய இந்தக் கதையில், சாய் பல்லவி பிரதான வேடத்தில் நடித்துள்ளார். 
 
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், நாக செளரியா சாய் பல்லவியின் கணவராக நடித்துள்ளார். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத்  தயாரித்துள்ளது. சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
 
இந்நிலையில் இசை வெளீயிட்டு விழாவில் சாய் பல்லவி பேசியபோது, நான் தற்செயலாக நடிக்க ஆரம்பித்தேன். ஆனால் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் என்னை கொண்டாடி விட்டார்கள். அதனால் தான் தமிழில் முதல் படமே நல்ல படமாக இருக்க வேண்டும் என நினைத்து சில நாட்கள் காத்திருந்தேன் என்று பேசினார்.