வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (22:18 IST)

நாளை வெளியாகிறது ‘கரு’ படத்தின் இசை

சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் ‘கரு’ படத்தின் இசை, நாளை வெளியிடப்படுகிறது. 
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கரு’. பெண்ணை மையப்படுத்திய இந்தக் கதையில், சாய் பல்லவி பிரதான வேடத்தில் நடித்துள்ளார்.  இதுதான் சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் படம். முதல் படத்திலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார் சாய் பல்லவி. அபார்ஷனை  மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
 
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், நாக செளரியா சாய் பல்லவியின் கணவராக நடித்துள்ளார். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத்  தயாரித்துள்ளது. சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு, நாளை நடைபெற இருக்கிறது.
 
பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்தப் படம், சில சிக்கல்களால் இப்போதுதான் இசையே வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.