புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2022 (16:32 IST)

நடிகர் சாகர் பாண்டே மறைவு... வருத்தத்தில் நடிகர் சல்மான் கான்!

salman sagar pande
இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு சண்டைக் கட்சியகளில் டூப்  நடிகராக பணியாற்றிய நடிகர்  சாகர் பாண்டே மாரடைப்பால் காலமானார்.

இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் சல்மான் கான். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் வசூல் சாதனை படைக்கும்.

இந்த நிலையில் இவர் நடிக்கும் படங்களில் வரும் சண்டைக் காட்சிகளில், சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் டுபாக நடித்தவர் சாகர் பாண்டே.

 
இவர்,  நேற்று  உடற்பயிற்சிக் கூட்டத்தில் உடற்பயிற்சி  செய்து கொண்டிருந்தபோது, மயங்கி கீழே விழுந்தார். அருகில் உள்ளோர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகக் கூறிவிட்டனர்.

சாகர் பாண்டேவின் மரணம் இந்தி சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj