மலையாள சினிமாவிலும் கால்பதிக்கும் எஸ் ஜே சூர்யா? பஹத் பாசிலுக்கு வில்லன்!
ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிகராக ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை.
சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த முறை கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களையும் கலந்து கட்டி நடித்தார். சமீபத்தில் அவர் வில்லனாக நடித்த மாநாடு மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய இரு படங்களும் வெற்றி பெற்று அவரின் நடிப்பு பெரிதாக சிலாகிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனால் எஸ் ஜே சூர்யா தான் வெகு நாட்களாக இயக்கவேண்டும் என ஆசைப்பட்ட கில்லர் படத்தைக் கூட அவர் இப்போது தள்ளிவைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக நடித்து வரும் அவர் இப்போது மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமாகவுள்ளார். பஹத் பாசில் நடிக்கும் படத்தை விபின் தாஸ் இயக்க உள்ளார். அந்த படத்தில் அவர் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.