இந்தியன் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்த எஸ் ஜே சூர்யா!
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இறுதிகட்ட ஷூட்டிங் இப்போது நடந்துவரும் நிலையில் இதுவரை படத்தின் வில்லன் யார் என்பதை அறிவிக்கவில்லை. ஆனால் எஸ் ஜே சூர்யாதான் வில்லனாக நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் இப்போது அதை சூசகமாக உறுதிப் படுத்தியுள்ளார் எஸ்ஜே சூர்யா. ஒரு நிகழ்ச்சியில் விஷால், ராம்சரண் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் படங்களில் வில்லனாக நடிக்கும் அனுபவம் எப்படி உள்ளது?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு “சூப்பரா இருக்கு” என பதில் சொல்லியுள்ளார் எஸ் ஜே சூர்யா. இதன் மூலம் இந்தியன்2 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் எஸ் ஜே சூர்யா.