1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (09:19 IST)

ஷங்கர் இயக்கும் கேம்சேஞ்சர் படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் கேம்சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்துக்காக கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதித் தந்துள்ளார்.  இந்த படத்தின் ஷூட்டிங் பாதி அளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகளை மட்டும் படமாக்க சுமார் 90 கோடி ரூபாய் அளவுக்கு படக்குழு செலவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷங்கர் எப்போதும் தன் படங்களின் பாடல்களை மிகப்பிரம்மாண்டமாக உருவாக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கை மொத்தமாக நவம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் ஷங்கர். இந்த படம் எதிர்பார்த்ததை விட பட்ஜெட் பல கோடி ரூபாய் எகிறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கும் ஷங்கருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.