திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 30 டிசம்பர் 2021 (10:20 IST)

ஆர் ஆர் ஆர் படம் திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் ஆகாதா? ராஜமௌலி பதில்!

ஆர் ஆர் ஆர் படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகாது என சமூகவலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

மிகப்பிரம்மாண்டமாக பேன் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ஆர் ஆர் ஆர் படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்காகவே ஒரு மாதத்தை ஒதுக்கி இந்தியா முழுவதும் சுற்றி வருகின்றனர் படக்குழு. இந்நிலையில் நேற்று இந்த படம் திட்டமிட்ட தேதியான ஜனவரி 7 ஆம் தேதி ரிலிஸ் ஆகாது என வதந்திகள் கிளம்பின. அதற்கான காரணமாக ஆந்திராவில் திரையரங்க கட்டண குறைப்பு மற்றும் பல்வேறு மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்றால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது என சொல்லப்பட்டது.

ஆனால் இதை ராஜமௌலி மறுத்துள்ளார். கண்டிப்பாக ஜனவரி 7 ஆம் தேதி ஆர் ஆர் ஆர் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவித்துள்ளார்.