வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 21 அக்டோபர் 2020 (16:28 IST)

ரூ. 4 கோடி உத்தரவாதம் அளித்துவிட்டு ’’சக்ரா’’ படத்தை ரிலீஸ் செய்யலாம் - விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு

விஷால் நடித்த ’சக்ரா’ திரைப்படம் ஓடிடியில் வரும் 30ஆம் தேதி ரிலீஸ் செய்ய கடந்த சில நாட்களாக முயற்சித்த நிலையில் திடீரென அந்த படத்தின் மீது வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சக்ரா திரைப்படத்தை வெளியிட வேண்டுமானால் 4 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தைச் செலுத்திவிட்டு விஷால் இப்படத்தை வெளியிடலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஷால் நடித்த ஆக்சன் திரைப்படம் ரூபாய் 8 கோடி நஷ்டம் என்றும் அந்த பணத்தை திருப்பி கட்டியவுடன் தான் ’சக்ரா’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த சில நாட்களாக விசாரணை செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது ரவீந்திரனுக்கு ரூபாய் 4 கோடியை கட்டுங்கள் என நீதிமன்றம் விஷாலுக்கு உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியானது,

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள விஷால் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக தகவல்கள் வெளியானது

இந்நிலையில். ’சக்ரா’ படம் கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த வழக்கு காரணமாகவே அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,ம்  இன்று சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கு குறித்து முக்கிய உத்தரவிட்டுள்ளது.

அதில், ரூ. 4 கோடிக்கான உத்தரவாதத்தைச் செலுத்திவிட்டு நடிகர் விஷால் நடுத்த சக்ரா திரைப்படத்தை வெளியிடலாம் என கூறியுள்ளது.

மேலும் சக்ரா திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடத் தடை விதிக்கக்கோறி ட்ரைடெண்ட் ஆர்ட் நிறுவனம்  தொடர்ந்து வழகு இன்றுடன் முடித்து வைக்கப்பட்டது.