திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (10:50 IST)

’சக்ரா’ படத்தை இடைவேளை வரை மட்டும் திரையிட விஷால் முடிவு: பரபரப்பு தகவல்!

ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன் பத்திரிகையாளர்களுக்கு என சிறப்பு காட்சிகள் திரையிடுவது வழக்கமான ஒன்றாக கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் உள்ளது என்பது தெரிந்ததே 
 
ஆனால் விஷால் நடித்த ’இரும்புத்திரை’ என்ற திரைப்படம் மட்டும் வித்தியாசமாக இடைவேளை வரை மட்டுமே பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது. அதன் பின்னர் படம் ரிலீஸ் ஆன மறுநாள் முழு படமும் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அதே பாணியில் விஷால் தற்போது நடித்து முடித்துள்ள ’சக்ரா’ படத்தையும் பத்திரிகையாளர்களுக்காக இடைவேளை வரை மட்டும் திரையிட விஷால் முடிவு செய்துள்ளார் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் பத்திரிகையாளர்களுக்கான இடைவேளை வரையான காட்சி திரையிடும் அறிவிப்பு குறித்து விஷால் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது
 
இரும்புத்திரை பாணியில் இடைவேளை வரை திரையிடும் விஷாலுக்கு ’சக்ரா’ படமும் வெற்றிப்படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்