வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (14:45 IST)

கத்து குடுண்ணா..! ராஜமெலினா சும்மாவா? – ஓடிடியில் சாதனை படைத்த ஆர்ஆர்ஆர்!

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் தற்போது ஓடிடியிலும் சாதனை படைத்துள்ளது.

தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் எண்டிஆர் இணைந்து நடித்த படம் ஆர்ஆர்ஆர். பிரம்மாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் வேறு பல உலக மொழிகளிலும் வெளியானது.

படம் வெளியான ஒரு மாதத்திற்குள்ளாகவே ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இந்த ஆண்டின் அதிக வசூல் நடத்திய இந்திய படம் என்ற சாதனையை படைத்தது. பின்னர் இந்த படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.

ஒவ்வொரு வாரமும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்து டாப் 10 படங்களை வரிசைப்படுத்திக் காட்டுவது நெட்ப்ளிக்ஸின் வழக்கம். அவ்வாறாக அதிகமாக பார்க்கப்படும் ட்ரெண்டிங் வரிசையில் கடந்த 14 வாரங்களாக தொடர்ந்து முதலிடத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படமே இருந்து வருகிறது. இதுவரை நெட்ப்ளிக்ஸில் தொடர்ந்து 14 வாரங்களாக எந்த படமும் முதல் இடத்தை பிடிக்காத நிலையில் ஆர்ஆர்ஆர் இந்த சாதனையை படைத்துள்ளது.