வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 3 ஆகஸ்ட் 2022 (15:13 IST)

தொடர் தோல்வி??இந்தி சினிமாப் பற்றி பேசிய ஆர்.ஆர்.ஆர் பட நடிகை

AliaBhatt
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை ஆலியாபட். இவரது நடிப்பில் அடுத்து வெளியான உள்ள படம் டார்லிங். இப்படத்தை ஜஸ்மீட் கே ரீன் இயக்கியுள்ளார், இப்படதிற்கு பிரவீஸ் மூர்யா வசனம் எழுதியுள்ளார்.

இப்படத்தில் ஆலியாபட்டுடன் இனைந்து ஷேபேலி ஷா, விஜய் வர்மா, ரோஷன் மேத்யூ நடித்துள்ளனர்.  பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷால் பரத்வாத் பாடல்கள் அமைத்துள்ளார்.

 இப்படத்தை ரெட் சில்லி என்டர்டெயிண்மென்ட் தயாரித்துள்ளது. இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி டார்லிங் படத்தை நெட்பிலிக்ஸ் வெளியிடவுள்ளது.

இந்த நிலையில், பாலிவுட் சினிமா பற்றி ஆலியாபட் கருத்து கூறியுள்ளார், அதில், இந்தி சினிமாவைப் பற்றி உட்கார்ந்த இடத்தில் இருந்தே, ஓ இந்தி சினிமா ஓ பாலிவுட் என்று பெருமையுடன் பேசுகிறோம். ஆனால், இந்த ஆண்டில் நல்ல படங்களை நாம் கொடுத்திருக்கிறோமா? இருப்பினும் தென்னிந்தியாவில்  யாரு உழைக்கவில்லையா? ஒரு நல்ல படம் எப்போதும் நன்றாக வரும் . எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தென்னிந்தியாவில் வெளியான ஆர்.ஆர்.ஆர். கேஜிஎஃப்-2, விக்ரம் உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் வெளியான படங்கள் எதுவும் குறிப்பிட்டுச் சொல்லும்படி வசூலீட்டி வரவேற்பை பெறவில்லை.