திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (17:57 IST)

மீண்டும் தொடங்கவுள்ள ஆர் ஆர் ஆர் ப்ரமொஷன் பணிகள்!

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகியுள்ள ஆர் ஆர் ஆர் திரைப்படம் மார்ச் 25 ஆம் தேதி ரிலிஸ் ஆக உள்ளது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டியையொட்டி  ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருந்தது.  இதற்காக படக்குழுவினர் இந்தியா முழுவதும் ப்ரமோஷன் செய்து வந்தனர். ப்ரமோஷன் பணிகளுக்காகவே கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.

ஆனால் படத்தின் ரிலீஸ் நெருங்கிய நேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் திரையரங்குகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. ந்நிலையில் இப்போது நிலைமை சீராகியுள்ள நிலையில் மார்ச் 25 ஆம் தேதி ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா முழுவதும் படக்குழுவினர் மீண்டும் ஒருமுறை ப்ரமோஷன் பணிகளை மேற்கொள்வதற்காக ஆயத்தம் ஆகி வருகின்றனர்.