மகளுடன் ரோஜா... இணையத்தை ஈர்க்கும் அழகிய புகைப்படம்!
தெலுங்கு, தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக சிறந்து விளங்கியவர் நடிகை ரோஜா. இவர் கடந்த 2002ல் இயக்குனர் ஆர்.கே செல்வமணி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையில் அரசியலில் நுழைந்து சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டார்.
ரோஜா - செல்வமணி தம்பதிக்கு அன்ஷுமலிகா மற்றும் கிருஷ்ணா லோஹித் என்ற ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் மகள், மகளுடன் ரோஜா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி பரவி வருகிறது.
ரோஜா மகளின் புகைப்படத்தை பார்த்து கோலிவுட் சினிமா ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர். ரோஜா மனசு வைத்தால் மகள் படங்களில் நடிப்பார். இப்போதே இயக்குனர்கள் ரோஜா வீட்டு காலிங் பெல் அடிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.