செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 10 செப்டம்பர் 2020 (09:57 IST)

நடிகை மியா ஜார்ஜின் நலங்கு Function - களைகட்டும் திருமண கொண்டாட்டம்!

தமிழில் அமரர் காவியம், வெற்றிவேல், நேற்று இன்று நாளை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மியா ஜார்ஜ் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். மோகன்லால் ,மம்மூட்டி, பிருத்விராஜ் உள்ளிட்ட முன்னணி மலையாள நடிகர்கள் படத்தில் நாயகியாக நடித்து புகழ்பெறுள்ளார்.

தற்போது சியான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் "கோப்ரா" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதேபோல் மலையாளத்திலும் "கண்மணிலா" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்து படங்களை கையில் வைத்துள்ள மியா ஜார்ஜிற்கு அஸ்வின் பிலிப் என்பவருடன் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றுள்ளது.

கொரோனா லாக்டவுன் என்பதால் சற்று தாமதாக திருமண வேலைகள் நடந்த வந்த நிலையில் தற்போது வேகமெடுத்துள்ளது. கிறித்துவ முறைப்படி நடக்கவுள்ள இவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்ப்போது bridal shower function எனப்படும் மணப்பெண் விழா நடத்தியுள்ளனர். அந்த அழகிய புகைப்பங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Bridal shower