1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 நவம்பர் 2023 (13:28 IST)

அவர் மீதான மரியாதை எழுத்தை மீறியது- கமலை புகழ்ந்த பார்த்திபன்

PARTHIBAN- SRUTHIHASAN
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன். இவரது ஒத்த செருப்பு என்ற படத்தை அடுத்து,  இயக்கிய இரவின்  நிழல் படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, புதிய படத்தை இயக்கி வருகிறார்.
 
தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார் பார்த்திபன். இந்த படத்தில் அவர் டீனேஜ் வயது இளைஞர்களின் வாழ்க்கையை சொல்ல உள்ளதாகவும், இந்த படத்துக்கு “Teen” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இப்படத்துக்கு கேவ்மிக் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் இப்படத்தை நடிகர் பார்த்திபனே தயாரிக்கிறார்.
 
இந்த படத்துக்கு இசையமைப்பாளராக டி இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறும் என டி இமான் தெரிவித்து பார்த்திபனுடன் இசைக் கோர்ப்பு பணிகளை மேற்கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
 
இந்த  நிலையில்,  இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் பாடல் பாடுகிறார். இதுகுறித்து  நடிகர்  பார்த்திபன் தன் எக்ஸ் தளத்தில், 
 
''க(ம)லை ….
 
மிகவும் நேசிப்பதற்கான காரணம் கலை எனக்குள் இயங்குவதற்கான ஆரம்பப் புள்ளிகளில் அவரும் ஒருவர்! 
 
(அவர் மீதான மரியாதை எழுத்தை மீறியது.)
 
ஸ்ருதிஹாசன் அவர்களை வைத்து ஒரு பாடலை என் புதிய படத்திற்காக படமாக்கிய போது, 
 
அவரது அலாதி திறமைகள் (பாட்டும் நடனமும்) என்னை ஆச்சர்யப்படுத்திய வேளையில்,இன்னாரின் மகள் என்ற ஞாபகம் வந்ததால் ஆச்சர்யப்பட ஏதுமில்லை என்பதுணர்ந்தேன்'' என்று தெரிவித்துள்ளார்.