புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 15 டிசம்பர் 2018 (19:05 IST)

வெளியானது! விஸ்வாசம் "வேட்டி கட்டு" செகண்ட் சிங்கள் டிராக்

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் - சிவா கூட்டணியில் 4- வது முறையாக உருவாகியுள்ள படம் விஸ்வாசம்.



இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நிரஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நடிகை நயன் தாரா நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் டி.இமான் அஜித்துக்கு முதன்முறையாக இசையமைக்கிறார்.
 
இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும், திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார்கள். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடலான "அடிச்சு தூக்கு" தற்போது வரை கலக்கி வரும் நிலையில், தல ரசிகர்களை மீண்டும் குஷிப்படுத்தும் விதமாக விஸ்வாசம் படத்தின் "வேட்டி கட்டு" என்ற செகண்ட் சிங்கள் டிராக் தற்போது  வெளியாகியுள்ளது.
 
தற்போது விஸ்வாசம் படத்தின் "வேட்டி கட்டு"  செகண்ட் சிங்கள் டிராக் இன்று வெளியாகியுள்ளது ஷங்கர் மஹாதேவன் இப்பாடலை பாடியுள்ளார்.