புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (22:35 IST)

சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி?

நடிகர் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' மற்றும் சிவகார்த்திகேயனின்  'டான்' பட ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ஜெய்பீம். இப்படத்திற்கு அடுத்து, சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில்  நடித்து வருகிறார். இப்படம் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது கொரொனா பரவலால் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிகிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் டான் படம் வரும் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.