1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 26 ஜனவரி 2022 (10:09 IST)

சூர்யா மேல் கோபமாக இருக்கும் இயக்குனரை ஒப்பந்தம் செய்த ஸ்டுடியோகிரின்!

தமிழ் சினிமாவில் சூர்யா- ஹரி கூட்டணி கமர்ஷியலாக வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளது.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ஆறு, வேல், சிங்கம் 1, 2, 3 ஆகிய படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெற்றவை. இதையடுத்து அவர்கள் கூட்டணியில் அருவா என்ற படத்தில் இணைய இருந்தனர். ஆனால் சூர்யாவுக்குக் கதை பிடிக்காததால் அந்த படத்தில் இருந்து வெளியேறினார் சூர்யா. இதனால் ஹரி சூர்யா மேல் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்.

இந்நிலையில் இயக்குனர் ஹரியை தங்களது நிறுவனத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது, சூர்யாவின் குடும்ப நிறுவனங்களில் ஒன்றான ஸ்டுடியோகிரீன் ஒப்பந்தம் செய்துள்ளதாம்.