வெளிநாட்டில் சாதனை படைத்த 'வலிமை'
அஜித் நடித்துள்ள வலிமை படம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படம் மலேசியாவில் புதிய சாதனை படைத்துள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு வலிமை படம் வெளியாக உள்ளது.
அஜித்திற்கு உலகளவில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில்,மலேசியாவில் புதிய சாதனை படைத்துள்ளது வலிமை படம்.
மலேசியாவில் ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்த பட்ட ஹேஸ்டேக் பட்டியலில் முதலில்தான் பிடித்துள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் விஷ்ணு இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான பில்லா படம் மலேசியாவில் படம்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.