வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 பிப்ரவரி 2022 (15:07 IST)

இத்தனை ஹிட் கொடுத்தும் கடனாளிதான்… தெலுங்கு பக்கம் சிவகார்த்திகேயன் ஒதுங்கிய காரணம்!

சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் – தெலுங்கில் உருவாகும் இருமொழிப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க உள்ளார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடக்க உள்ளது. இந்த படத்தின் கதாநாயகியாக ஆர் ஆர் ஆர் படத்தின் நாயகி ஒலிவியா மோரிஸ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தெலுங்கு தயாரிப்பாளருக்கு கால்ஷீட் கொடுக்க முக்கியமான காரணம் அவரின் பணப்பிரச்சனைகள்தான் என்று சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன் வரிசையாக ஹிட் கொடுத்து வந்தாலும், இன்னமும் அவர் கடனாளியாகதான் இருக்கிறார். அவர் நடித்த சில படங்களின் தோல்வி காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்த கடன் இப்போது பெரிய தொகையாக உள்ளது. ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போதும் தயாரிப்பாளரோடு கடனை அடைக்க தானும் கையெழுத்து போட்டு வருகிறார். ஆனால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் முழுவதும் தயாரிப்புப் பணிகளை தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பார்கள். அதுமட்டும் இல்லாமல் சொந்த காசைப் போட்டு படமெடுப்பதால் வட்டிப் பிரச்சனை இல்லை. ரிலிஸின் போது பிரச்சனை இருக்காது என்பதால் இந்த முடிவை சிவகார்த்திகேயன் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.