ரி ரிலீஸில் 25 நாட்களைக் கடந்த வேட்டையாடு…. வியக்க வைக்கும் வசூல்!
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் டிஜிட்டலில் புத்துருவாக்கம் செய்யப்பட்டு நேற்று கிட்டத்தட்ட 70 திரைகளில் ரிலீசானது. நேற்று புதுப் படங்கள் 7 ரிலீஸான நிலையிலும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பல திரைகளில் முதல் காட்சி ஹவுஸ்புல்லாக ஓடியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் இப்போது பார்த்தாலும் படம் கூஸ்பம்ப் மொமண்டை தருகிறது என சிலாகித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் கௌதம் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
102 திரைகளில் வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் தற்போது 25 நாட்களைக் கடந்து 10க்கும் மேற்பட்ட திரைகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த ரி ரிலீஸில் 1 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.