ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 12 ஜூலை 2023 (09:35 IST)

கே ஜி எஃப் இயக்குனரை சந்தித்த கமல்ஹாசன்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

நடிகரான கமல்ஹாசன் அரசியல்வாதியான பின்னர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். ஆனால் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்தின் மிகப்பெரிய ஹிட்டால் அவர் இப்போது அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்போது இந்தியன் 2 மற்றும் பிராஜக்ட் கே ஆகிய படங்களில் நடித்து வரும் அவர் அடுத்து ஹெச் வினோத் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அடுத்து பா ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரிடம் கதைகேட்டுள்ளார். இதனால் அடுத்த சில ஆண்டுகளுக்கு அவரின் படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் இப்போது அவர் கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீலை சமீபத்தில் சந்தித்துள்ளாராம். இந்த சந்திப்பால் அவர்கள் இருவரும் இணைந்து ஏதேனும் பட அறிவிப்பை வெளியிடுவார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.