ரஜினியின் கூலி திரைப்படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 171 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.
ஏப்ரல் 22 ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த டீசரில் ஆக்ஷன் காட்சிகளில் ரஜினிகாந்த் மிரட்டியிருப்பதாக ரசிகர்கள் புல்லரித்தனர். இதையடுத்து படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
லோகேஷின் முந்தைய படங்களைப் போலவே இந்த படத்திலும் பல மொழி நடிகர்கள் நடிக்க உள்ளனர். படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்துக்கு பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் இந்த படத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக சொல்லப்படுகிறது.