ரண்வீரின் நிர்வாண படம் - போலீஸில் புகார் கொடுத்த என்ஜிஓ அமைப்பு
பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் மீது சமூக வலைதளங்களில் நிர்வாண படங்களை வெளியிட்டு, பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஷியாம் மங்கரம் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், செம்பூர் காவல் நிலையத்தில் ஐடி சட்டத்தின் பிரிவு 67Aஇன் கீழ் இந்திய தண்டனைச் சட்டத்தின் 292, 293, 354 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் ஒரு பெண்ணின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காகவும், ஒரு பெண்ணின் கண்ணியத்தை அவமதித்ததாதவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஷியாம் மங்கரம் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் செம்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட இந்த புகாரைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67A இன் கீழும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 292, 293, 354 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் ஒரு பெண்ணின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காகவும், ஒரு பெண்ணின் கண்ணியத்தை அவமதித்ததாகவும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"ரண்வீர் சிங்கின் படங்கள் எந்த ஆணோ பெண்ணோ வெட்கப்படும் வகையில் க்ளிக் செய்யப்பட்டுள்ளன" என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.இந்தியாவில் நடிகர்கள் 'நாயக்' என்று அழைக்கப்படுபவர்கள். அவர்களைப் பின்பற்றுபவர்கள் அதிகமாக இருப்பர். சிலர் அவர்களை கடவுள் போல வணங்குவர். அந்த வகையில், மக்களின் உணர்வுகளைப் பணயம் வைத்து நடிகர்கள் நடிக்க முடியாது என்று என்ற அந்த அமைப்பு புகாரில் தெரிவித்துள்ளது.
"சமூகத்தில் நிர்வாணமாக உலாவ வேண்டும் என்பது அர்த்தமல்ல. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் எப்போதும் ஆதரிக்கிறோம்," என்றும் அந்த அமைப்பு மேலும் கூறியுள்ளது.
காணொளிக் குறிப்பு,
நிர்வாண போஸ் கொடுத்த ரண்வீர் வழியில் விஷ்ணு விஷால் - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
இது குறித்து செம்பூர் காவல் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, "திங்கட்கிழமை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் தொடர்புடைய ஒருவரிடமிருந்து எங்களுக்கு ஒரு மனு கிடைத்தது. இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. அந்த புகார் மீது முகாந்திரம் உள்ளதா என நாங்கள் விசாரித்து வருகிறோம்," என்று தெரிவித்தனர். ரண்வீர் சிங் ஒரு சர்வதேச பத்திரிகைக்காக செய்த போட்டோஷூட்டின் படங்களை சமீபத்தில் தமது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டார். அந்த படங்களில் அவர் முற்றிலும் நிர்வாணமாக தோன்றினார். ஆனால், அவரது அந்த அந்தரங்க உறுப்புகள் தெரியாதவாறு அந்த படங்கள் எடுக்கப்பட்டிருந்தன. அவரது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி நெட்டிசன்களிடமிருந்து கலவையான எதிர்வினைகளை பெற்றன.
அதே சமயம், பல பாலிவுட் நட்சத்திரங்கள் ரண்வீரின் செயலை துணிச்சலான முயற்சி என்று பாராட்டினர்.
ரண்வீரைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு தமிழ் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷாலும் தமது இடுப்புக்குக் கீழே துண்டை மற்றும் போட்டுக் கொண்டு படுத்தபடி நிர்வாண போஸ் கொடுத்த படங்களை சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டார். இந்த இரு நடிகர்களின் செயல்களை சமூக ஊடக பயனர்கள் தொடர்ந்து விமர்சித்து பதில் இடுகைகளை பகிர்ந்து வருகின்றனர்.