ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 14 ஜூன் 2023 (09:00 IST)

சசிகுமார் இயக்கி நடிக்கும் குற்றப் பரம்பரையில் பிரபல தெலுங்கு ஹீரோ!

இயக்குனரும் நடிகருமான சசிகுமார் குற்றப் பரம்பரையினர் சம்மந்தமான கதையை வெப் சீரிஸாக உருவாக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கான கதையை எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுத உள்ளதாகவும், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சசிகுமாரே அதில் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் மற்றும் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் இப்போது வெளியாகி வருகின்றன. விரைவில் இந்த சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இதில் வரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு ஹீரோ ராணா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. வெப் சீரிசை பல மொழிகளிலும் வெளியிட உள்ளதால் பல மொழி நடிகர்களை பயன்படுத்த உள்ளதாக தெரிகிறது.