வியாழன், 6 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : புதன், 29 ஜனவரி 2025 (10:22 IST)

த்ரிஷா கூட டேட்டிங் செய்தேன்…ஆனால் வொர்க் அவுட் ஆகவில்லை.. ராணா ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் நாயகிகளின் பிரகாச காலம் என்று பார்த்தால் 5 முதல் 10 ஆண்டுகள்தான். அதன் பிறகு அக்கா, அம்மா வேடத்தைக் கொடுத்துவிடுவார்கள். ஆனால் ஒரு சிலர்தான் இதற்கு விதிவிலக்காக இருப்பார்கள். அப்படிப்பட்ட நடிகைதான் திரிஷா.

ஜோடி என்ற படத்தின் மூலம் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து இப்போதும் பரபரப்பான கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக பெரியளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும் பொன்னியின் செல்வன் வெற்றியால் மீண்டும் அவரைத் தேடி வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. சமீபகாலமாக அவர் விஜய், அஜித் மற்றும் சூர்யா என அடுததடுத்து முன்னணி நடிகர்களோடு நடித்து வருகிறார்.

40 வயதைக் கடந்தும் த்ரிஷா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ராணா உள்ளிட்ட சிலரை அவர் காதலிப்பதாக தகவல்கள் எல்லாம் கடந்த காலங்களில் வெளியாகின. இந்நிலையில் த்ரிஷாவுடனான உறவு குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியுள்ள ராணா “நானும் த்ரிஷாவும் பல ஆண்டுகளாக நட்பில் இருக்கிறோம். அவரோடு நான் டேட் கூட செய்தேன். ஆனால் என்னவோ தெரியவில்லை, எங்களுக்குள் வொர்க் அவுட் ஆகவில்லை” எனக் கூறியுள்ளார்.