ரீமேக் படங்களுக்கு இனி மவுசு குறைவு - ராம் கோபால் வர்மா
ரீமேக் படங்களுக்கு இனிமேல் மவுசு குறையும் என இயக்குநர் ராம் கோபால் வர்மா எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
இந்தியளவில் புஷ்பா, ஆர்.ஆர்.ஆர். கே.ஜி.எஃப்-2 ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தன. இந்தப் படங்களை ஹிந்தியிலோ மற்ற மொழிலோ டப்பிங் செய்யும்போது அதிக செலவிருக்காது. ஆனால் நானி நடிப்பில் வெளியான ஜெர்சி என்ற படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அதே பெயரில் வெளியான இப்படம் தோல்வி அடைந்துள்ளது. இப்படத்தை டப்பிங் செய்திருந்தால் ரூ.10 லட்சம் தான் தயாரிப்பாளர்க்கு செலவாகியிருக்கும். ஆனால், பல கோடிகள் செலவு செய்து இப்பபடரீமேக் செய்ததால் இப்படத்திற்கான பல முயற்சிகள் தோல்வியடையும் எனத் தெரிவித்துள்ளார்.