புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 டிசம்பர் 2020 (19:24 IST)

ஜெயலலிதாவாக ராதிகா… சசிகலாவாக ஊர்வசி – ராம்கோபால் இயக்கும் படத்தில் இவர்கள்தான் ஹீரோயின்ஸ்!

தெலுங்கு சினிமாவின் பிரபலமான இயக்குனர் ராம்கோபால் வர்மா இப்போது சசிகலாவின் பயோபிக்கை இயக்கி வருகிறார்.

மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு இப்போது ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் எதையுமே வித்தியாசமாக யோசிக்கும் இயக்குனர் ராம் கோபால் வர்மா சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை இப்போது படமாக எடுத்து வருகிறார்.

இந்த படத்தில் சசிகலாவாக ஊர்வசியும், ஜெயலலிதாவாக ராதிகாவும் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது கொச்சினில் நடைபெறுகிறது. வழக்கமாக ராம்கோபால் வர்மா என்றாலே சர்ச்சைதான் என்கிற நிலையில் இப்போது இந்த படம் மேலும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.