ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 டிசம்பர் 2020 (18:59 IST)

டிசம்பர் 31 ல் கட்சி அறிவிப்பு இல்லை – ரஜினியின் முடிவின் பின்னணி!

நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி அறிவிப்பை வெளியிட போவதில்லை என சொல்லப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31 ஆம் தேதி தனது கட்சியின் பெயரை அறிவிப்பார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது ரஜினி அந்த முடிவை தள்ளி வைத்துள்ளாராம். அதற்குக் காரணம் டிசம்பர் 31 ஆம் தேதி கொரோனா அச்சம் காரணமாக நடக்க இருந்த நிகழ்ச்சிகளை எல்லாம் சென்னை மாநகராட்சி அனுமதி மறுத்துள்ளது. தேவையில்லாத கூட்டம் கூடினால் கொரோனா பரவுமோ என்ற அச்சம்தான் காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அன்று கட்சி பற்றி அறிவிப்பை வெளியிட்டால் ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் கூட்டம் கூடி தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படும் என்பதால் ஜனவரி முதல் வாரத்தில் அறிவிப்பை வெளியிடலாம் என ரஜினி முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.