வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 20 டிசம்பர் 2024 (09:16 IST)

ஸ்ரீதேவியைக் கைது செய்ய சொர்க்கத்துக்குப் போவார்களா?.. அல்லு அர்ஜுன் கைதை விமர்சித்த ராம் கோபால் வர்மா!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார். அவருடன் சென்ற அவரது மகன் ஸ்ரீதேஜ் பலத்த காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து சம்மந்தப்பட்ட தியேட்டர் மீதும் அல்லு அர்ஜுன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் இடைக்கால ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்தால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது என காவல்துறை எச்சரித்தும் அல்லு அர்ஜுன் வந்ததாக காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுனின் ஜாமீனை ரத்து செய்ய சொல்லி உச்சநீதிமன்றத்தில் தெலங்கானா போலீஸ் மேல்முறையீடு செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ராம் கோபால் வர்மா அல்லு அர்ஜுனின் கைதைக் கண்டித்து பேசியுள்ளார். அதில் “அல்லு அர்ஜுனின் கைதை எதிர்த்து எல்லா நடிகர் நடிகைகளும் எதிர்க்க வேண்டும். என்னுடைய ’க்சண க்சணம்’ படத்தின் ஷூட்டிங்கின் போது வந்த கூட்டத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தார்கள். அதற்காக இப்போது ஸ்ரீதேவியைக் கைது செய்த தெலங்கானா போலீஸ் சொர்க்கத்துக்குப் போகுமா?” எனக் கூறியுள்ளார்.