எம்பிக்களை தள்ளிவிட்ட விவகாரம்: ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?
நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டு பாஜக எம்பிக்களை தள்ளிவிட்ட சம்பவத்தில் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்ததாக செய்திகள் வெளியான நிலையில், அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் அமித்ஷா பேசி விட்டதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம் காட்டி வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக எம்பிக்களும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய நிலையில், இந்த சலசலப்பில் பாஜகவின் இரண்டு எம்பிக்களை ராகுல் காந்தி தாக்கியதாகவும், அதனால் அந்த எம்பிக்கள் கீழே விழுந்து காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது குறித்து பாஜக எம்பிக்களை தாக்கியதாக ராகுல் காந்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணைக்கு பின்னால் ராகுல் காந்தி கைது செய்யப்படுவாரா என்பது தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், ராகுல் காந்தி கூறுவது அனைத்தும் பொய் என்றும், எங்கள் எம்பிக்கள் அவர் வரும்போது வழி விட்டனர் என்றும், ஆனால் ராகுல் காந்தி எங்களை தள்ளிவிட்டார் என்றும் காயம் அடைந்த பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ் பத் ஆகிய இருவரும் காவல்துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Edited by Mahendran