1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (15:58 IST)

கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தாமதம்!

கார்த்தி சர்தார் படத்துக்குப் பிறகு ராஜு முருகன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தற்போது இவர், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இப்போது இவர் தனது பாதையை மாற்றிக்கொண்டு முழுக்க முழுக்க கமர்ஷியலாக ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்தி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளுக்காக ராஜு முருகன் இப்போது கேரளாவி முகாமிட்டுள்ளாராம். இந்த திரைப்படம் கார்த்தியின் 25 ஆவது படமாக அமைவதால் கூடுதல் அக்கறையோடு படக்குழுவினர் உழைக்கிறார்களாம். இந்த படத்துக்கு ஜப்பான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அக்டோபர் முதல் வாரத்திலேயே தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இயக்குனர் ராஜு முருகனுக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனை காரணமாக தாமதமாகியுள்ளார்.