புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2020 (11:43 IST)

கொரோனா பத்தி அப்பவே சொன்ன ரஜினி படம்? இக்கட சூடு..! – பிரேம்ஜி வெளியிட்ட வீடியோ!

கொரோனா வைரஸ் இலுமினாட்டி சதி என சதிக்கோட்பாட்டாளர்கள் கூவி வரும் நிலையில் அதற்கு தீனி போடும் வகையில் ஒரு தமிழ் பட வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகர் பிரேம்ஜி.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியுள்ள நிலையில், அது எவ்வாறு பரவியது என்பது குறித்த யூகமான பல தகவல்களை சதிகோட்பாட்டாளர்கள் பேசி வந்தனர். இந்நிலையில் சீனாவின் ஆய்வகத்தில் கொரோனா உருவாக்கப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தது, சும்மா இருந்தவர்களுக்கு வீடியோ போட ஆதாரமானது.

மேலும் ஆங்கில நாவல்களில், காமிக்ஸ்களில் கொரோனா பற்றி உள்ள குறிப்புகளையெல்லாம் சுட்டிக்காட்டி இது திட்டமிட்ட சதி என அவர்கள் பேசி வந்தனர். இந்நிலையில் தமிழக சதி கோட்பாட்டாளர்களுக்கு தீனி போடும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் பிரேம்ஜி.

ரஜினிகாந்த் நடித்து 1981ல் வெளிவந்த படம் கர்ஜனை. அதில் ஜெய்சங்கர் வில்லனாக நடித்திருப்பார். அதில் ஒரு காட்சியில் விஞ்ஞானி ஒடுவரை மிரட்டும் ஜெய்சங்கர் ஆபத்தான ஒரு வைரஸையும், அதற்கான மாற்று மருந்தையும் உருவாக்குமாறு சொல்வார். முதலில் வைரஸை பரப்பி பிறகு அதற்கான மாற்று மருந்தை விற்று சம்பாதிக்கலாம் என அதில் அவர் கொடூரமான திட்டம் ஒன்றை இடுவார். தற்போது கொரோனா பரப்பப்பட்டதே வியாபார நோக்கில்தான் என சதி கோட்பாட்டாளர்கள் பேசிவரும் நிலையில் இந்த காட்சியை பிரேம்ஜி ஷேர் செய்துள்ளதன் மூலம் அமெரிக்க நாவல்களில் வருவதற்கு முன்பே வைரஸ் குறித்த தகவல் தமிழ் படத்தில், அதிலும் ரஜினி படத்தில் காட்டப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளதாக பலர் தெரிவித்து வருகின்றனர்.