1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (20:15 IST)

கொரோனா நேரத்தில் செய்தி வாசிப்பாளினி அனிதா சம்பத் எடுத்த திடீர் முடிவு..!

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டதாக திடீரென அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருந்தார். இந்த திருமண செய்தி அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது மீம்ஸ் கிரியேட்டர்களும் கவலையுடன் மீம்ஸ்களை போட்டு இணையவாசிகளின் கவனத்தை திருப்பினர். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கில் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருந்து வரும் நேரத்தில் ஒரு செய்தி வாசிப்பாளினியாக தனது பணியை தொடர்ந்து செய்துவந்தார்.

இந்நிலையில் தற்போது "தொலைக்காட்சி நண்பர்களுக்கும் கொரோனா பரவி வரும் காரணத்தினால்...வீட்டிலுள்ளோர் நலன்கருதி இன்றில் இருந்து 10 நாட்களுக்கு சிறு விடுப்பு எடுத்துள்ளேன்..10 நாட்களுக்கு செய்திகளில் வரமாட்டேன்..கொஞ்சம் மிஸ் பன்ற மாதிரிதான் இருக்கு..என்ன பண்றது..நீங்களும் பத்திரமா இருங்க. அதுவரை தினம் யூ-டியூபில் சந்திப்போம்" என கூறி பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் செய்தி வாசிப்பாளினியாக இந்த கொரோனா ஊரடங்கிலும் நாட்டுமக்களுக்கான உங்களது அர்ப்பணிப்பு சிறப்பானது. இனி உங்களுக்காகவும்,  உங்களது குடுபத்திற்காகவும் சற்று ஓய்வெடுத்து பாதுகாப்பாக இருங்கள் என கூறியுள்ளனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொலைக்காட்சி நண்பர்களுக்கும் கொரோனா பரவி வரும் காரணத்தினால்...வீட்டிலுள்ளோர் நலன்கருதி இன்றில் இருந்து 10 நாட்களுக்கு சிறு விடுப்பு எடுத்துள்ளேன்..10 நாட்களுக்கு செய்திகளில் வரமாட்டேன்..கொஞ்சம் மிஸ் பன்ற மாதிரிதான் இருக்கு..என்ன பண்றது..நீங்களும் பத்திரமா இருங்க.. . அதுவரை தினம் யூ-டியூபில் சந்திப்போம்.. #11am daily #anitha_sampath_vlogs #link_in_bio . #covid_19 #besafe #stayhome #anithanewsreader #anithasampath #anithasampathnewsreader

A post shared by Anitha Sampath (@official_anithasampath) on