செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 28 நவம்பர் 2018 (18:43 IST)

2.0 பட முதல் நாள் வசூலை கணித்த நிபுணர்கள்! - இதனை கோடியா!.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் நாளை ரிலீஸாக உள்ளது. 

 
இந்நிலையில் படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்யும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
 
பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள2.0 படம் முதல் நாளில் எளிதில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படம் ரிலீஸான அன்று ரூ. 50 கோடி வசூலித்தது. அதை ரஜினியின் 2.0 எளிதில் தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2.0 படம் நாளை சோலோவாக ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
2.0 படத்தின் ட்ரெய்லரே மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. 2.0 எந்திரன் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் கதை நன்றாக இருந்தால் நிச்சயம் ஹிட்டாகும். ட்ரெய்லரிலேயே பல விஷயங்களை காட்டி மக்களை அசத்திவிட்டார்கள். அதனால் படத்தில் அதை விட பிரமாண்டம் இருக்கும் என்று சினிமா வர்த்தக நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
2.0 பல மொழிகளில் ரிலீஸாகிறது. ரிலீஸான அன்று இந்தியில் ரூ. 20 கோடியும், தமிழில் ரூ. 35க்கும் மேற்பட்ட கோடியும், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நல்ல வசூல் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை. 
 
அனைத்து மொழி வசூலையும் சேர்த்தால் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் வசூலை எளிதில் தோற்கடிக்கும் என்று மற்றொரு நிபுணர் கூறியுள்ளார். இந்தியில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த படம் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
2.0 படம் சோலோவாக ரிலீஸாகிறதா இல்லையா, விடுமுறை நாளில் வருகிறதா என்பது எல்லாம் முக்கியம் இல்லை. ரஜினி படம் ரிலீஸாகும் நாள் தமிழகத்தில் விடுமுறை போன்றது தான். படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. கண்டிப்பாக தமிழகத்தில் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.